Thursday, October 17, 2019

சிரிப்பு........



சிரிப்பை ஆயுதமாக பயன்படுத்தினால்,
ஆயுதமே உன்னை கண்டு பயப்படும்,
ஆயுதம் என்பது வன்முறையை உண்டாக்கும் ஆயுதம் அல்ல, அகிம்சையை போதிக்கும் சொல் ஆயுதம்,
ஆயுதத்தினால்  தொடுக்கப்படும் போரை விட சொல்லினால் தொடுக்கப்படும் போர் மிக பெரிய வல்லமை படைத்தது.

என்றும் உங்கள் நண்பன்,
Advocate.K.Vinod Kumar.,BA.,BL.
Madras High Court.

நூறு நாள் வேலை திட்டம் (100 நாள் வேலை திட்டம்)

நூறு நாள் வேலை திட்டம் (100 நாள் வேலை திட்டம்)


அரசு வருமானம் பெற்றுக்கொண்டு, ஏதோ சம்பளம் இல்லாமல் வேலை பார்ப்பது போல் உள்ளது அரசு ஊழியர்களின் முகம், கொஞ்சம் கூட கருணையில்லா மனிதர்கள், 100 நாள் வேலை தான் இன்று பலருடைய அன்றாட தேவைக்கு அர்த்தமுள்ள ஒன்றாக இருக்கின்றது, பெற்றபிள்ளைகள் கூட தன்னை பெற்றெடுத்த பெற்றோருக்கு உதவுவதில்லை, ஆனால் இந்த நூறு நாள் வேலை திட்டம் உதவுகின்றது, அப்படி 100 நாள் வேலை பார்த்து கிடைக்கும் சம்பளத்தை எடுக்க வங்கிக்கு சென்றால் கொஞ்சம் கூட கருணையே இல்லாமல் ,ஈவு இரக்கம் இன்றி , முகம் சுழிக்க வைக்கும் வங்கி ஊழியர்கள் பதில்கள், பாரத்தை சுமந்து கொண்டு இருக்கும் ஏழ்மையான முகங்கள் சற்று கூனி குறுகி தான் போகின்றது, வங்கி ஊழியர்கள் அந்த முதியோர்களை நடத்தும் முறை , அவர்களுக்கும் வயதான தாய் தந்தை இருக்கின்றார்கள் என்பதை புரிந்துகொண்டு அனுசரித்து நடக்க வேண்டுகின்றேன்.

உங்களுடம் அந்த முதியோர்கள் பிச்சை கேட்கவில்லை, அவர்கள் உழைத்ததற்கான, உடல் உழைப்பிற்கான, 100 நாள் சம்பளத்தை அல்லவா கேட்கிறார்கள், உழைத்து உழைத்து ரேகையே அழிந்து போயிருக்கும் அவர்களிடம் ரேகையை வைத்தால் தான் ஊதியம் என்று சொன்னால் எப்படி, அந்த முதியோர்கள் தங்கள் கையுனுடைய ரேகை அழிந்ததற்கான காரணத்தை கேட்டு பாருங்கள் அப்பொழுது தெரியும் அந்த அழிந்த கை ரேகையின் பின்னால் அவர்களின் கடின உழைப்பு இருக்கும் என்று, முகம் சுளிக்காமல் கொஞ்சம் அந்த முதியோர்களுக்காக உதவி செய்யுங்கள், நீங்கள் கொடுக்கும் அந்த 100 நாள் வேலைக்கான சம்பளம் தான் அவர்களின் அன்றாட உணவுக்கான செலவு, 

கோடிக்கணக்கில் பணம் எடுக்கும் பணக்காரர்களுக்கு மட்டும் தான் உங்களது புன்னகை என்றால், நீங்கள் இன்னும் வாழ்க்கை என்னும் பாடத்தை படிக்க ஆரம்பிக்கவில்லை என்று தான் சொல்லமுடியும், 

வங்கியில் பொன்னகை வைத்து பணம் எடுக்கும் அளவை வைத்து தீர்மானிக்காதீர், அவர்கள் செல்வந்தர்கள் என்று, ஒருவர் புன்னகையை எவ்வளவு வைத்திருக்கிறார் என்று பாருங்கள்.

இனிமேலாவது 100 நாள் சம்பளம் எடுக்கவரும் முத்தியவர்களிடம் உங்களது கோபத்தை காட்டாதீர்கள், உங்களுக்கும் முதிர் வயதில் பெற்றோர்கள் இருக்கின்றார்கள் என்பதை நினைவில் நிறுத்துங்கள்,

நான் நேரில் பார்த்ததை பதிவிட்டேன்.

Advocate.K.Vinod Kumar.,BA.,BL.
Madras High Court.

Senior Advocate. Mr.P.Wilson, MP (Rajya Sabha)

 Senior Advocate. Mr.P.Wilson, MP (Rajya Sabha)


எங்களின் பெருமதிப்பிற்குரிய, என்னுடைய சீனியர், நாடாளுமன்ற உறுப்பினர், மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் அவர்களின் குரல் உயர்நீதிமன்றத்தில் ஒலித்தது, உச்சநீதிமன்றத்தில் ஒலித்தது, இனிவரும் காலங்களில் நாடாளுமன்றத்திலும் ஒலிக்க இருக்கின்றது....

உங்களுடைய நாடாளுமன்ற  பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்....

என்றும் வாழ்த்துக்களுடன்,
Advocate.K.Vinod Kumar.,BA.,BL.,
சென்னை உயர்நீதிமன்றம்.

Maintained By Techmarketworld